கண்ணனை ஜனார்த்தனன் கடையில் வேலைக்கு விட்டு செல்லும் மீனா – கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கண்ணனை ஜனார்த்தனன் கடையில் வேலைக்கு விட்டுட்டு வருகிறார். இதனால் லட்சுமி கோவமடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தொடர்ந்து ஐஸ்வர்யா பின்னாடி தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணன் காலேஜில் இருந்து ஐஸ்வர்யாவை வீட்டில் வந்து விடுகிறார். அங்கு கபடி விளையாடி கொண்டிருக்க ஐஸ்வர்யாவும் அங்கு சென்று விளையாடுகிறார்.

அப்பொழுது பார்த்து ஐஸ்வர்யாவின் சித்தி வந்து விடுகிறார். ஐஸ்வர்யாவை துரத்தி துரத்தி அடிக்கிறார். அடுத்ததாக மீனாவை காட்ட, அவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டுள்ளார். ஜீவா ஏன் இப்படி பன்றாரு என்று கேட்க அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் நிறைய வேலை இருப்பதாக சொல்கிறார்.

எதற்கு இத்தனை பொருட்கள் இலவசமாக தருகிறீர்கள் என்று கேட்க எனக்கு இந்த லாபம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இதெல்லாம் ஒரு தொழில் ரகசியம் என்று சொல்கிறார். இந்நிலையில் மீனாவிற்கு சந்தேகமாகிறது. பிறகு சொல்வதாக சொல்லி செல்கிறார்.

அதன் பிறகு மீனாவின் குழந்தை அழுக, யார் தூக்கியும் அழுகையை நிறுத்துவதாக இல்லை. கண்ணனை அனுப்பி மீனாவை அழைத்து வர அனுப்புகிறார். கண்ணன் கடைக்கு வந்து மீனா அழுவதாக சொல்லி அழைத்து செல்கிறார். அப்பாவை எப்படி தனியாக விட்டு செல்வது என்று யோசிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அருகில் இருக்கும் கண்ணன் எதுக்கு இப்படி கஷ்டப்படணும், பூட்டிட்டு போக வேண்டியது தானா?? என்று கேட்க ஜனார்த்தனன் கோவமடைகிறார். மீனா கண்ணனை இங்கேயே இருக்க சொல்கிறார். வீட்டில் தான் சொல்லிக்கொள்வதாக சொல்லிவிட்டு செல்கிறார். இது ஜனார்தனனுக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. தொடர்ந்து ஜனார்தனனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிறார்.

டேஸ்டியான “காளான் மசாலா” ரெசிபி – ட்ரை பண்ணி அசத்துங்க!!

வீட்டிற்கு வரும் மீனா குழந்தை தூங்குவதை பார்த்து கோவமடைகிறார். குழந்தை அழுகுதுனு சொன்னிங்க என்று சண்டையிடுகிறார். மேலும் கண்ணன் கடையில் இருப்பதாக சொல்ல லட்சுமிக்கு கோவம் தலைக்கேறுகிறது. எதற்கு அவனை அங்க விட்டுட்டு வந்தா என்று மீனாவிடம் கோவப்படுகிறார் லட்சுமி இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here