பற்களால் ரிப்பனை கடித்து கடை திறந்த அமைச்சர் – பாகிஸ்தானில் நடந்த வினோதம்!!

0

பாகிஸ்தானில் உள்ள கடையை திறந்து வைக்க வந்த அமைச்சர் கத்தரிக்கோல் சரியில்லாததால்  தனது பற்களால் ரிப்பனை கடித்து,அதை திறந்து வைத்த வினோத செயல் நடந்திருக்கிறது.

வினோத முறையில் கடைதிறப்பு:

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்து வருகிறார். இவர் தலைமையிலான அமைச்சரவையில் பாகிஸ்தானில் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில்,  இவரது அமைச்சரவையில் சிறைத்துறை  அமைச்சராக உள்ளவர் ஃபயாஸ் – உல் – ஹாசன் சோஹன்.  இவர் சார்ந்த வினோத செயல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பேசு பொருளாக மாறியுள்ளது.


இவர் சமீபத்தில் , ராவல்பிண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடையை திறக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நிகழ்ச்சியின் போது வழக்கம்போல ரிப்பன் வெட்டி கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவரிடம் கடை திறப்பதற்காக வழங்கப்பட்ட கத்தரிக்கோலில் கூர்மை சரியாக இல்லை.  இதனால் சமயோசிதமாக யோசித்த அமைச்சர் வினோத செயல் ஒன்றை மேற்கொண்டார்.  இது அங்கு சுற்றியிருந்த மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அதாவது, கத்தரிக்கோல் சரியாக வெட்டாததால், தனது பற்களால் அந்த ரிப்பனை கடித்து கடையை திறந்து வைத்துள்ளார்.  இதனை அங்கு இருந்த பத்திரிகை காரர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்தனர்.  அமைச்சரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் பரவி பெரிய வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது  அதிக நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here