கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில்வே அறிமுகப்படுத்திய புதிய யுக்தி – இருக்கைகளை சுத்தம் செய்யும் ரோபோ!!

0

டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் பெட்டிகளை புறஊதாக் கதிர்கள் மூலம்  சுத்தம் செய்ய  புதிய ரோபோவை வடிவமைத்து, மேலும் அது சுத்தம் செய்யும் வீடியோவையும் பதிவு செய்து இந்தியன் ரயில்வே டெல்லிப் பிரிவானது தற்போது வெளியிட்டுள்ளது.

ரயில்வேயில் ரோபோ:

உலகளாவிய நிலையில் தொழில் நுட்பங்களின் பங்கானது அதிக அளவில் இடம் பெற்று வருகிறது. இதில் மனிதர்களை போன்ற தோற்றம் கொண்ட ரோபோக்களை கண்டுபிடித்து வருகின்றன. இதை போன்ற தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னணியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் ரோபோக்களை உபயோகிப்பதற்கான நிலை நிலவி வந்தது. இதற்கு சான்றாக  கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க இந்த மாதிரியான ரோபோக்களை பயன்படுத்தினார்கள். அதற்கு மருத்துவ உலகில் பெரும் வரவேற்பு கிடைத்து. தற்போது இந்திய ரயில்வேயும் ரோபோக்களை உபயோகப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி ரயில்வே டெல்லிப் பிரிவானது ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு ரோபோக்களை பயன்படுத்தவுள்ளது. இதற்கு ஒரு சான்றாக, பெட்டிகளில் உள்ள  கிருமிகளை ரோபோ, புறஊதாக் கதிர்கள் மூலம் சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த முறையானது டெல்லி, லக்னோ இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் கொரோனா பரவல் தடுக்கபடலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 6 ஆம் தேதி பிரயாக்ராஜ் (Prayagraj) ஜெய்ப்பூர் சிறப்பு ரயிலின் ஏசி பெட்டியிலும் இதனை அறிமுகப்படுத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here