Sunday, May 19, 2024

கேன் குடிநீரில் 45 சதவீதம் சுகாதாரமற்றவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Must Read

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் விற்கப்படும் அடைக்கப்பட்ட குடிநீரில் 45 சதவீதம் சுகாதாரமற்றதாக இருப்பதாகவும், தரமற்றதாக இருந்ததாகவும் சென்னை மாநகராட்சி என்ஜிடி அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

அடைக்கப்பட்ட குடிநீர்:

பல இடங்களில் கடந்த சில வருடங்களாக அடைக்கப்பட்ட குடிநீரை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குடிநீர் வியோகிக்கும் நிறுவனங்கள் கேன்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகள் போன்றவற்றில் தான் குடிநீரை அடைத்து தருகின்றனர். தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை பரிசோதிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளிடம் இருந்து 187 மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தரும் விதமாக அமைத்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

packaged water supply in chennai
packaged water supply in chennai

ஆய்விற்காக எடுக்கப்பட்ட மாதிரிகளில் 42 மாதிரிகள் பரிசோதனைக்கு தகுதியற்றவைகளாக இருந்தன. கூடுதலாக, 30 மாதிரிகள் பாக்டீரியா பாதிக்கப்பட்டதாகவும், திருப்தி அளிக்காததாகவும் இருந்துள்ளது. 20 மாதிரிகளில் பெயரில் தவறு உள்ளதாகவும், 14 மாதிரிகள் பிராண்ட் பெயரில் தவறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குடிநீர் கேன்களை பயன்படுத்தும் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்:

இந்த ஆய்வு முடிவுகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ஜிடி எனப்படும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது. இதனால் சுகாதாரமற்ற குடிநீரை வியோகிக்கும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் தகவல்!!

water crisis in chennai
water crisis in chennai

இது குறித்து மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது “இதுபோல் சுகாதாரமற்ற முறையில் வியோகிக்கப்படும் குடிநீர் மூலமாக காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளுவது மூலமாக பல உண்மைகள் தெரிய வருகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்விலும் 50 மாதிரிகளில் 14 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X