ஜீ தமிழ் பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி’யின் கதாநாயகன் புவியரசுக்கு திருமணம் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடர்

பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. வித்தியாசமான கதைக்களத்துடன் துவங்கிய தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. குண்டான உடல்வாகு கொண்ட இளம்பெண், எப்படி அவருக்கு திருமணம் நடக்கும், வாழப்போகும் குடும்பதில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்வாள் என்று பரபரப்புடன் ஆரம்பித்தது ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடரில் புதுமுகம் அஸ்வினி என்பவர் ராசாத்தி என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் புவியரசு, இனியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் புவியரசுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. தனது நீண்டநாள் காதலியை மணம் முடித்துள்ளார் புவி. புவியின் திருமண விழாவுக்கு ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரின் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இந்த சீரியலின் நடிகை அஸ்வினி மற்றும் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை உட்பட சில பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் ஜீ தமிழின் மற்றுமொரு தொடரின் காதல் ஜோடிகளான மதன் மற்றும் ரேஷ்மாவும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த திருமண விழாவில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here