அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பல்கலைக்கழகம் வெளியீடு!!

0

2003ம் ஆண்டு முதல் திறந்த நிலை பல்கலை கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தங்கள் அரியர் தேர்வுகளை இந்த செமஸ்டரில் எழுதிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகம் அறிவித்து உள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தமிழக அரசு அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து செய்தி வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பாக அதன் பதிவாளர் ரத்ன குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “திறந்த நிலை பல்கலை கழகத்தின் சார்பில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்விற்கான அட்டவணை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் உள்ளது. அதன்படி, டிசம்பர் 12 முதல் 16 வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும். மேலும், டிசம்பர் 17 முதல் 31 வரை எழுத்துத் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்விற்க்கான வினாத்தாளை பல்கலையின் இணையதள முகவரியில் தேர்வு நாளன்று காலை 9 மணிக்கும், மதியம் நடை பெரும் தேர்விற்கு மதியம் 1 மணி அளவிலும் பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரடியாகவோ பார்த்துக்கொள்ளலாம். விடைத்தாளின் முதல் பக்கத்தை A4 அளவுள்ள பேப்பரில் பதிவிறக்கம் செய்தோ அல்லது தங்கள் கைப்பட எழுதியோ கொள்ளலாம். தேர்வு எழுதிய நாளன்றே தங்கள் விடைத்தாளை மாணவர்கள் ஸ்கேன் செய்து பல்கலையின் இணைய தள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தங்கள் விடைத்தாளை பல்கலையின் முகவரிக்கு தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும்.

‘சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலை தான், ஆதாரம் உள்ளது’

மேலும், 2003ம் ஆண்டு முதல் சேர்ந்துள்ள மாணவர்கள் தங்கள் அரியர் தேர்வுகளை எழுதிக் கொள்ள இதை கடைசி வாய்ப்பாக பயன் படுத்திக்க கொள்ளலாம். அக்டோபர் மாதம் வெளியான தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க கொள்ளலாம்” இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here