Thursday, May 16, 2024

தமிழகத்தில் வெங்காய விலை அடுத்த ஆண்டு தான் குறையும் – வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு!!

Must Read

தமிழகத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் வெங்காயத்தின் விலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக வேளாண்பல்கலைகலைக்கழகம் கணித்துள்ளது.

தொடர்ச்சியான விலை உயர்வு:

கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருளாக கருதப்படும் வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. பருவநிலை மாற்றம், வடமாநிலங்களில் கனமழை போன்ற பல்வேறு காரணங்களால் வெங்காயம் விலை உயர்வினை சந்தித்து வந்தது. மிக குறுகிய காலத்திற்குள் இப்படியாக விலை உயர்ந்தது மக்களை கவலை அடைய வைத்தது. அதே போல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் வரத்து குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை கடந்தது என்று பார்த்தால் பெரிய வெங்காயத்தின் விலை 70 ரூபாய்க்கு மேல் இருந்தது. கொரோனா சூழல் காரணமாக இந்த விலை உயர்வு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு வெங்காயங்கள் எப்போதும் வடமாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், மற்ற மாநிலங்களில் உற்பத்தி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் தான் இப்படி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என்று அனைவர் மத்தியிலும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் 40 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும். ஆனால், அதிகமான மழை காரணமாக பல டன் வெங்காயம் அழுகி சேதம் அடைந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் கணிப்பு:

அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே வெங்காயம் இருப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில், தமிழக வேளாண்பல்கலைகழகம் இந்த விலை ஏற்றம் குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நாமக்கல், பெரம்பலூர், துறையூர், தேனி, அரியலூர், மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து தான் வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் இருந்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அறுவடை காலம் இல்லாததால் தொடர்ச்சியாக இந்த விலையேற்றம் இருக்கும் என்றும் அறுவடை காலமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது என்று வேளாண்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -