தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

0

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று ..!

விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 64 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பியது தெரியவந்தது.

டெல்லி சென்று வந்தவர் – உயிரிழப்பு..!

இவர்களில் 55 பேர் அடையாளம் காணப்பட்டு 25 பேர் விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும் 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த முத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நபர் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here