நாய், பூனை இறைச்சியை விற்க, சாப்பிட சீனாவில் தடை – ரொம்ப லேட்டு நீங்க..!

0

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போதுஉலகமெங்கிலும் பரவி வருகிறது. மேலும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் உணவு பழங்கங்களே. சீனாவில் வரைமுறை இன்றி வனவிலங்கு இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமே கொரோனா நோய்த் தொற்று உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வன விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கும் சாப்பிடுவதற்கும் தடை விதித்துள்ளது சீனா.

கொரோனா தோற்று:

சீனாவில் முதன்முதலாக ஸென்ஷென் நகரில் நாய் மற்றும் பூனை இறைச்சி விற்கவும் சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் பரவலாக அனைவரும் வன விலங்குகள், உயிரினங்கள், வளர்ப்புப் பிராணிகள், பூச்சி புழுக்கள் என அனைத்தையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உணவாகக் கொள்கின்றனர்.

இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

The meat market in China | Market Research | daxue consulting

ஸென்ஷென் நகரோ ஒரு படி மேலே சென்று நாய்கள் மற்றும் பூனைகள் இறைச்சி விற்கவும் சாப்பிடவும் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் மே மாதம் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. ஆசியா முழுவதும் உணவு இறைச்சிக்காக ஓராண்டில் மூன்று கோடி நாய்கள் கொல்லப்படுகின்றன என்று பன்னாட்டு மனிதநேய அமைப்பு குறிப்பிடுகிறது.

Second Chance Adoption Centre – CUPA

உணவாகக் கொள்ளும் வௌவால் உள்ளிட்டவற்றிடமிருந்து கரோனா நோய்த் தொற்று உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே வன விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கும் சாப்பிடுவதற்கும் தடை விதித்தது. எனினும், நாய்கள், பூனைகளின் இறைச்சியை உண்ணும் பழக்கம் பெரும்பாலான சீனர்களிடம் இல்லை. அவர்கள் அதை விரும்புவதுமில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here