கொரோனவால் மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை, நிதியுதவி – நவீன் பட்நாயக் அறிவிப்பு

0

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நிறைவேறி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவர் என தெரிவித்து உள்ளார்.

உயிர் தியாகம் செய்யும் மருத்துவர்கள்:

கொரோனவால் பாதிக்கப்படுபவர்களை தொடுவதற்கு அவர்களது குடும்பத்தினரே அஞ்சும் பொழுது மருத்துவர்கள் தான் தங்கள் உயிரையும் பணயம் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். அப்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் மருத்துவர்கள் இடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அரசு மரியாதை & விருது:

இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் மேலும் அவர்களுக்கு அரசு விருது வழங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here