டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – தமிழக முதல்வர் உறுதி..!

0

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும் தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை..!

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை ஈத்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான நடந்த ஓரிரு சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பாதிப்பு – டாக்டர் உட்பட இருவர் உயிரிழப்பு..!

அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்..!

அவர்கள் தன்னலம் கருதாமல் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன்.

சளி, இருமல் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் எனவே பயப்பட தேவையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here