#NZvsAUS டி 20 போட்டி – ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி!!

0

இன்று நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான மூன்றாவது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா:

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டியில் நியூஸிலாந்து அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தற்போது இந்த இரு அணியினருக்கு இடையேயான மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் செயல்பாடு மிக பிரமிப்பாக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பின்ச் 69, பிலிப் 43 மற்றும் மேக்ஸ்வெல் 70 ரன்களை குவித்தனர். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை. மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது.

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது அஜித் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

நியூஸிலாந்து அணியினர் அகர் பந்தில் வீழ்ந்தனர். முடிவில் நியூஸிலாந்து அணி 144 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அகர் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் இவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் தனது அசத்தல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தற்போது 5 போட்டிகளை கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here