இந்த வருடம் நோ ரஞ்சி கோப்பை – பிசிசிஐ அறிவிப்பு!!

0

கொரோனா அச்சம் காரணமாக உள்ளூர் போட்டிகளை துவங்க காலதாமதம் ஆகியுள்ளது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சி கோப்பை:

ஆண்டு தோறும் இந்தியாவின் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே, ரஞ்சி கோப்பை மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பையை பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போது இந்த முறை கொரோனா அச்சம் காரணமாக உள்ளூர் தொடர்கள் தொடங்க தாமதமானது. இதனை தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்டு முதலாவதாக சையது முஷ்டாக் அலி கோப்பையை நடத்த திட்டமிட்டனர். தற்போது இந்த தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அடுத்த கட்டமாக ரஞ்சி கோப்பை நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடைபெறாது என்ற அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஞ்சி கோப்பை கடந்த 1934-35 ஆண்டுகளில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது முதன்முறையாக இந்த முறை ரஞ்சி கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

#INDvsENG டெஸ்ட் தொடர் – உள்ளூர் நடுவர்கள் நியமனம்!!

இதுகுறித்து பிசிசிஐ செயலர் கிரிக்கெட் சங்கங்களுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியாதவது, ‘கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடைபெறாது. இதனை ஆலோசனைக்கு பின்னர் தான் முடிவெடுத்துள்ளோம். அடுத்ததாக மகளிருக்கான 50 ஓவர் போட்டியும், விஜய் ஹசாரே போட்டியும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த 2 தொடரும் கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here