#INDvsENG டெஸ்ட் தொடர் – உள்ளூர் நடுவர்கள் நியமனம்!!

0

தற்போது வரும் 5ம் தேதி அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் உள்நாட்டு நடுவர்களை நியமித்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னையில் வைத்தும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியை அஹமதாபாத்தில் வைத்தும் நடத்த திட்டமிட்டு உள்ளனர். தற்போது முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி அன்று துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து அடைந்தனர். தற்போது அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா அச்சம் காரணமாக போட்டி நடுவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இயலாத ஒன்று. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக உள்ளூர் நடுவர்களை நியமிக்க ஐசிசி ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான நடுவர்களின் பெயர் தற்போது வெளிவிவந்துள்ளது.

வேற லெவெல் கவர்ச்சி காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கி போன ரசிகர்கள்!!

முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக இந்தியாவை சேர்ந்த அனில் சவுத்ரி மற்றும் நிதின் மேனன் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 வது நடுவராக ஷம்சுதின் செயல் பட உள்ளர். இரண்டாவது போட்டியில் நடுவர்களாக வீரேந்திர சர்மா மற்றும் நிதி மேனன் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 வது நடுவராக அனில் சவுத்ரி செயல்பட உள்ளார். ஐசிசி எலைட் பேனல் என்ற உயரிய குழுவில் இருக்கும் நிதின் மேனனை தவிர மற்ற இரு நடுவர்களை டெஸ்ட் போட்டிக்கு புதியவர்களே. மேலும் போட்டி நடுவராக ஜவஹல் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here