பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது – மாநில அரசு அதிரடி உத்தரவு..!

0
online class
online class

கர்நாடகா மாநிலத்தில் 7ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் பூட்டப்பட்டு உள்ளதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் கல்வி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒப்படையுங்கள் – பள்ளிகளுக்கு உத்தரவு..!

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது நன்மை அளிக்கும். ஆனால் பள்ளிகளில் எல்கேஜி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மேலும் எலக்ட்ரானிக் உபகரணங்களை மாணவர்கள் தொடுவது ஆபத்து என்பதால் கர்நாடகாவில் எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here