10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒப்படையுங்கள் – பள்ளிகளுக்கு உத்தரவு..!

0
attendance
attendance

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு மதிப்பெண்கள்:

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் இருந்து 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டை பொறுத்து 20 சதவீதமும் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகப்பெரிய மோசடி – முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை..!

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பு வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வெழுத இருந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை நாளை மாலைக்குள் அந்தந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here