Thursday, May 16, 2024

கொரோனாவால் வருவாய் நெருக்கடி – ஜிஎஸ்டி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தகவல்!!

Must Read

இன்று நடைபெற்ற 41 வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கூட்டம்:

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தான் 40 வது ஜி.எஸ்.டி கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடைபெற்றது. அதே போல் இன்று காலை 11 மணி அளவில் காணொளி கட்சி வாயிலாக 41 வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.

மாநில நிதித்துறை அமைச்சர் அனுராக் தாகூர், முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கடந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறுகையில் “அடுத்து நடக்கவிருக்கும் கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்த கூட்டமாக கருதப்படுகிறது.” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆலோசனைகள்:

இந்த கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைமை வகித்த நிதியமைச்சர் நிர்மலசித்தராமன் கூறியதாவது ” இந்த வருடம் மிகவும் மோசமான வருடம். ஆனால், இது எல்லாம் கடவுளின் செயல். இந்த நிதியாண்டில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் 1.65 லட்சம் கோடி இழப்பீடாக வழங்கபடும்.”

gst
gst

மாநிலங்கள் தங்கள் ஜி.ஸ்.டி வரிகளை முறையாக செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த ஜி.ஸ்.டி கவுன்சில் கூட்டம் 2021 ஆம் வருடம் ஏப்ரலில் நடைபெற உள்ளது. அப்போது அனைத்து மாநிலங்களும் வழங்கிய வரி கணக்கிடப்படும். இது ஒரு கடுமையான காலம் தான். ஆனால், நமக்கு வேறு வழி இல்லை. மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் கடன் பெற்று கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான வரினை செலுத்தினால் போதுமானது” என்று இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.

பலரும் அதிருப்தி:

இதனை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறுகையில் “இவர்கள் பாரபட்சம் பார்த்து தான் வரியினை விதித்துள்ளனர். பா.ஜ ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு குறைவான வரியினை விதித்துள்ளனர்.” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியடைந்துள்ள மற்ற அமைச்சர்கள்!!

அதே போல் பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சரான மன்ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சாப் சிறிய மாநிலம். எங்களது வருவாய் 1,800 லட்சம் கோடி தான். ஆனால், 4,400 லட்சம் கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு மிகுந்த சிரமம் அளிப்பதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு முழுமையாக இழப்பீடு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -