Friday, April 26, 2024

மீண்டும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியடைந்துள்ள மற்ற அமைச்சர்கள்!!

Must Read

உத்தரபிரதேச மாநிலத்தில் கேபினட் அமைச்சரான சித்தார்த் நாத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தற்போது அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சரான சித்தார்த் நாத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – தடுப்பு நடவடிக்கைகளுடன் கொண்டாட அறிவுறுத்தல்!!

siddharth nath singh
siddharth nath singh

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலன் பற்றி ட்வீட்:

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “கடந்த சில நாட்களாக எனக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்தன. அதனால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டேன், அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடல் நலன் நன்றாக தான் உள்ளது, ஆனாலும் நான் மருத்துவர்கள் கூறியிருக்கும் அறிவுரைகளை பின்பற்ற உள்ளேன். என்னை நானே தனிமை படுத்தி கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாக இருந்தவர்கள் உங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டதால் தன்னை வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். அவரது நலனுக்காக பலரும் பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இவரை போலவே மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் தற்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏகள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -