Tuesday, April 30, 2024

இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

Must Read

தேசிய செய்திகள்:

  • நாட்டின் 130 கோடி மக்களில் குறைந்தது பாதி பேர் (50%) அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார். இந்தியாவில் தற்போது உள்ள நிலவரப்படி 75 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தரப்பு மக்களும் குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகளை பெறுவர் என்றும் விரைவில் அந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாநில செய்திகள்:

  • பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு அரியர் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் தரலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார். தேர்வுகளை ரத்து செய்வதை விட, இது சிறந்த முடிவாக இருக்கும் என கூறிய நீதிபதி, மறுமதிப்பீடு ரிசல்ட் வருவதற்குள் தேர்வுக்கட்டண அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும் கூறினார்.
  • மருத்துவ படிப்புகளில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 300க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பண்டிகை காலங்களும் துவங்கவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
  • தமிழகத்தில் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமாக செப்டம்பர் 30ம் தேதி வரை 32 லட்சத்து 41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக செய்திகள்:

  • சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4,670 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) 312 ரூபாய் குறைந்து 40,360 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை ரிப்போர்ட்:

  • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் பெண்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையினை ஏற்று பெண்கள் ரயில்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 7 மணிக்கு பிறகும் பெண்கள் பயணிக்கலாம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
  • கொரோனா பரவல் காரணமாக முடங்கிய நாட்டின் பொருத்தரத்தை மீட்க மீண்டும் ஒரு பொருளாதார சலுகை அறிவிக்கப்பட்ட உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • தமிழ் சினிமா துறையினை பல காலமாக கலங்க வைத்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது தாங்களாகவே தங்களது இணையதளத்தை முடக்கி உள்ளோம் என்பது போல் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -