பிரபல வாரிசு பாடகருடன் ஜோடி சேர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் – சும்மா சொல்லக்கூடாது, ஜோடி பொருத்தம் பிரமாதம்!!

0
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவாங்கி அப்டேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கரில் போட்டியாளராக அறிமுகமான சிவாங்கி பின்பு குக் வித் கோமாளி என்ற குக்கிங் ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய சிவாங்கி தன்னுடைய தனித்துவமான காமெடி சென்சால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். எனக்கு பாட்டு மட்டும் இல்ல காமெடியும் கைவந்த கலை என்று காட்டும் விதமாக இந்த ஷோவ பாக்குற ரசிகர்களுக்கு தன்னுடைய நகைச்சுவை மூலம் பஞ்சமில்லாத பஃன் கொடுத்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் நடித்துள்ளார். .இதனை தொடர்ந்து பல படங்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் சிவாங்கி தன்னுடைய youtube சேனலிலும் ஆக்டிவாக இருந்து வருவது நாம் அறிந்த ஒன்றே. பல திரைப்பட பாடல்களுக்கு கவர் சாங் மற்றும் ஆல்பம் சாங் பாடி, அதை தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டு வருகிறார்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு டிசம்பர் 8ம் தேதி ரெட் அலர்ட்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

இந்நிலையில் “தேன் தேன்” என்ற பாடலுக்கு பிரபல பாடகர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தனுடன் சேர்ந்து, இவர் திரிஷா போலவும் அவர் விஜய் போலவும் பாடிக்கொண்டே ஆடுவது போன்ற ஒரு வீடியோ தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இந்த க்யூட் ஜோடி அழகாக இருக்கிறது என்றும், யார் இந்த பையன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில் சிவாங்கியின் க்யூட்டான இந்த ஆல்பம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here