Function-க்கு போகும்போது நாள் முழுக்க பளபளன்னு இருக்கணுமா?? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!!

0
Function-க்கு போகும்போது நாள் முழுக்க பளபளன்னு இருக்கணுமா?? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!!
Function-க்கு போகும்போது நாள் முழுக்க பளபளன்னு இருக்கணுமா?? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!!

இனி உங்க வீட்டில் ஏதாவது பங்ஷன்னா உங்க முகத்தை அழகு படுத்துவதற்காக இனி பார்லருக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் இன்னைக்கு நாம பார்க்க போற பேஸ்பேக் நம்ம முகத்தை இன்ஸ்டன்ட் க்ளோவா மாத்துறதுக்கு ஹெல்ப் புல்லா இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • பப்பாளி – 1/4
  • அரிசி மாவு -1 டீஸ்பூன்
  • கடலை மாவு -1 டீஸ்பூன்
  • முல்தானி மெட்டி -1 டீஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள் -1 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை:

இந்த இன்ஸ்டன்ட் ஃபேஸ் பேக் செய்வதற்கு பப்பாளி பழத்தை தோல் நீக்கி நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

இத்துடன் கடலை மாவு மற்றும் முல்தானி மெட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பக்குவத்திற்கு தயார் செய்யவும். பிறகு நம் முகத்தை சுத்தமாக கழுவி விட்டு பின் ஒரு காட்டன் துணி எடுத்து நம் முகத்தை துடைத்துக் கொள்ளவும்.

இப்போ நாம ரெடி பண்ணி வைத்துள்ள இந்த பேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்யவும். ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரை வைத்து நம்மளுடைய முகத்தை கழுவி விடவும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய முகத்திற்கு இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here