Friday, May 3, 2024

இனி வண்டி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை – போலீசார் எச்சரிக்கை!!

Must Read

தமிழகத்தில் இனி வாகன சட்ட விதிகளின்படி வாகனங்களில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாமல் வாகனத்தை ஒட்டினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

புதிதாக பதிவு:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இருப்பதில்லை என்ற புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து தற்போது போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களுக்கு புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளனர். நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு, இடைவெளி குறித்த விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இனி வாகனம் வாங்குவோர் அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் நம்பர் பிளேட் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட விவரம்:

போக்குவரத்து போலீசார் சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அது,

  • அனைத்து வாகனங்களின் பின்னும் பிளேட் இருக்க வேண்டும். அவை 35 மி.மீ உயரத்தில் 7 மி.மீ., அகலத்திலும் நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும்.
  • மூன்று சக்கர வாகனத்தை பொறுத்த வரையில், 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும், நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும்.
  • 500 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களில் நம்பர் பிளேட் 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும் நம்பருக்குள்ளான இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும்.
  • 500 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களில் நம்பர் பிளேட் 35 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும் நம்பருக்குள்ளான இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும்.
  • மற்ற அனைத்து விதமான வாகனங்களிலும் நம்பர் பிளேட் 65 மி.மீ உயரத்திலும், 10 மி.மீ அகலத்திலும், நம்பருக்குள்ளான இடைவெளி 10 மி.மீ இருக்க வேண்டும்.
  • தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் நிறம் வெள்ளையாகவும், எழுத்தின் நிறம் கருப்பாகவும் இருக்க வேண்டும்.
  • வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும்.
  • அனைத்து வகை வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். எழுத்து கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். முன்னும் பின்னும் இரண்டு வரிசையில் வாகன பதிவு எண் இருக்க வேண்டும்.

இவ்வாறாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -