நோபல் பரிசுகள் 2020 அறிவிப்பு – உருவான வரலாறு & பரிசுத்தொகை!!

0

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முதலாவதாக மருத்துவத்திற்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஹெபாடிடிஸ் சி வைரஸ் குறித்த ஆய்விற்காக 3 பேருக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

நோபல் பரிசுகள்:

டைனமைட் போன்ற ஆபத்தான வெடிபொருட்களை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆல்ப்ரடு நோபல் பெயரில் உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்படும் என்பதை ஒருவரும் கணித்திருக்க வாய்ப்பில்லை. ஆம், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டுபிடித்து புகழ் பெற்றவர் இவர். அதுவே அவருக்கு வினையாகவும் அமைந்தது. இந்த ஆய்வில் ஏற்பட்ட விபத்தில் தனது சகோதரர் மற்றும் தொழிலாளர்களை இழந்தார் நோபல். இதனால் இவரின் வெடிபொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தும் தலைமறைவாக இருந்து கொண்டு பலவற்றை தயாரித்து அதற்கான காப்புரிமையும் பெற்றார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

alfred nobel
Alfred Nobel

சில ஆண்டுகள் கழித்து ஆல்ப்ரடு நோபலின் மற்றொரு சகோதரர் உடல் நலக்குறைவால் இறந்து விட அன்றைய நாளேடுகள் ஆல்ப்ரடு நோபல் இறந்து விட்டதாக செய்திகள் வெளியிட்டன. இதனை பார்த்த மக்கள் நாசக்கார விஞ்ஞானி இறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். தனது இறப்பை மற்றவர்கள் கொண்டாடியதை பார்த்த நோபல் நொந்து போய் விட்டார். பின்னர் வெடிமருந்துகள் காப்புரிமை மூலம் சேர்த்த சொத்துக்களை பொது சேவைகளுக்கு பயன்படுத்த முடிவெடுத்து உயில் எழுதி வைத்தார்.

Nobel prize
Nobel prize

தனது சொத்தில் 94 சதவீதத்தை (1000 கோடி ரூபாய்க்கு மேல்) வேதியியல், மருத்துவம், அமைதி, இயற்பியல், இலக்கியம் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்குமாறு கடைசி உயிலில் குறிப்பிட்டு இருந்தார். இதன் படி நோபல் இறந்த பிறகு 1901ம் ஆண்டு முதல் அவரது பெயரிலேயே பரிசுகள் வழங்கப்படுகின்றது. பரிசு பெரும் ஒரு நபருக்கு 24 காரட் தங்க மூலம் பூசிய பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 8 கோடிக்கு மேல் ரொக்கம் வழங்கப்படுகிறது.

2020 நோபல் பரிசு பெறுபவர்கள்:

Nobel prize winners 2020
Nobel prize winners 2020

இந்த ஆண்டிற்கான மருத்துவ துறையில் நோபல் பரிசு பெற ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஹெபாடிடிஸ் சி வைரஸ் கிருமியின் கண்டுபிடிப்பிற்காக இது வழங்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here