Thursday, May 16, 2024

விபிஎஃப் கட்டணம் இல்லாத புதிய படங்கள் இரண்டு வாரத்திற்கு மட்டுமே வெளியீடு – இயக்குநர் பாரதிராஜா!!!

Must Read

தீபாவளிக்கு புதிய படங்கள் இரண்டு வாரத்திற்கு மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளார் பாரதிராஜா. இரண்டு நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணம் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆகையால் புதிய படம் தீபாவளி அன்று வெளியீடு.

புதிய படம் வெளியீடு

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் இயக்குநர் பாரதிராஜா புதிய படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார். இது தொடர்பான பேச்சு வார்த்தை ஏற்கனவே நடைபெற்று தோல்வி அடைந்தது. அதில் திரையரங்க உரிமையாளர் விபிஎஃப் கட்டணம் கட்டினால் மட்டுமே புதிய படம் வெளியிட முடியும் என்று தெரிவித்து வந்தனர். ஆனால் பாரதிராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

thaetre
thaetre

கடைசி வரையில் திரையரங்க உரிமையாளர் ஒத்துக்கொள்ளவில்லை. பாரதிராஜா திரையரங்கம் திறக்கப்பட்டாலும் புதிய படம் வெளியிடுவதாக இல்லை என்று தெரிவித்தார். தற்போது யூ.எஃப்.ஓ மற்றும் க்யூப் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த நவம்பர் மாதம் விபிஎஃப் கட்டணம் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆகையால் புதிய படம் தீபாவளிக்கு வெளியீடு.

அறிக்கை

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான பாரதிராஜா கூறிய அறிக்கையில், தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளருக்கும் பங்காளி சண்டை இல்லை என்றும், இது அவர்களை பழிவாங்குவதற்கான எந்த நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனம் தற்போது விபிஎஃப் கட்டணம் இரண்டு வாரங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளனர். ஆகையால் புதிய படம் தீபாவளிக்கு வெளியிடப்படும்.

theatre
theatre

இது அவர்களுக்கு கிடைத்த சிறு வெற்றியாகவும் கருதப்படுகிறது. இரண்டு வாரம் என்ற குறைந்தப்பட்சத்தில் இருந்தாலும் விரைவில் விபிஎஃப் கட்டணம் முழுவதும் இல்லாமல் ஆகிற சூழல் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். அத்தகைய பெரும் வெற்றியை காண்பதில் ஆர்வமாக உள்ளோம் என்று அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: 2வது இடத்திற்கு முன்னேறுமா SRH?? இன்று குஜராத் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 16) ராஜீவ் காந்தி மைதானத்தில் 66 வது லீக் ஆட்டம் நடைபெற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -