‘சுவையில் அசைவ உணவு வகையை மிஞ்சும் பன்னீர் டிக்கா ரெசிபி’ இப்படி ஒரு தடவை உங்க வீட்டில் சமைத்து பாருங்க சுவை அள்ளும்!!

0
'சுவையில் அசைவ உணவு வகையை மிஞ்சும் பன்னீர் டிக்கா ரெசிபி' இப்படி ஒரு தடவை உங்க வீட்டில் சமைத்து பாருங்க சுவை அள்ளும்!!
'சுவையில் அசைவ உணவு வகையை மிஞ்சும் பன்னீர் டிக்கா ரெசிபி' இப்படி ஒரு தடவை உங்க வீட்டில் சமைத்து பாருங்க சுவை அள்ளும்!!

இனி பன்னீர் டிக்கா சாப்பிட ஹோட்டலுக்கு போக அவசியம் இருக்காது. இன்னைக்கு நம்ம வீட்டிலேயே ஈஸியாகவும், சுவையாகவும் பன்னீர் டிக்கா ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் – 1/2 கிலோ
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பட்டர் – 3 டீஸ்பூன்
  • குடைமிளகாய் -1
  • பெரிய வெங்காயம் – 1
  • தயிர் – 1 கப்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்:

இந்த பன்னீர் டிக்கா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் தயிர் ஊற்றி அதோடு 2 டீஸ்பூன் மல்லி தூள்,மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு ரெடி செய்து கொள்ளவும். அதன் பிறகு 1/2 கிலோ பன்னீரை நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து ஊறவைக்கவும்.

அதன் பிறகு ஒரு குச்சி எடுத்துக்கொண்டு, அதில் நாம் மசால் தடவி வைத்துள்ள பன்னீர் மற்றும் நறுக்கிய குடை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சொருகி கொள்ளவும். இப்பொழுது ஒரு தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் பட்டர் விட்டு இந்த பன்னீரை அதில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான பன்னீர் டிக்கா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here