குளிருக்கு இதமாக காரசாரமான நண்டு கிரேவி.., இப்படி செஞ்சு பாருங்க.., மிச்சமே இருக்காது!!

0
குளிருக்கு இதமாக காரசாரமான நண்டு கிரேவி.., இப்படி செஞ்சு பாருங்க.., மிச்சமே இருக்காது!!
குளிருக்கு இதமாக காரசாரமான நண்டு கிரேவி.., இப்படி செஞ்சு பாருங்க.., மிச்சமே இருக்காது!!

இந்த குளிர் காலத்திற்கு ஏற்ற மாதிரி காரசாரமா ஒரு நான் வெஜ் ரெசிபி சாப்பிடணும் போல இருக்க தான் செய்யும். அப்படி ஒரு ரெசிபி தான் இன்னைக்கு நாம செய்ய போறோம். நாம் இன்னைக்கு காரசாரமான நண்டு கிரேவி செய்வது எப்படினு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. நண்டு – 1/2 கிலோ

2. வெங்காயம் -200 கிராம்

3. தக்காளி-3

4. மல்லி தூள்- 2 டீஸ்பூன்

5.மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்

6.மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்

7.உப்பு -தேவையான அளவு

8. பெரிய வெங்காயம் -2

9.கொத்தமல்லி -சிறிதளவு

10. கறிவேப்பிலை- சிறிதளவு

11. பச்சை மிளகாய் -4

12. மிளகு தூள் -2 டீஸ்பூன்

13. பட்டை ,கிராம்பு -சிறிதளவு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை விளக்கம்:

இந்த நண்டு கிரேவி செய்வதற்கு முன்னாடி நாம எடுத்து வச்சிருக்க நண்ட சுத்தமா கழுவி தண்ணி இல்லாம எடுத்துக்கணும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதை ஊற வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காய துண்டுகளையும் போட்டு வதக்கி விடவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய உள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது இதில் நாம் கழுவி வைத்துள்ள நண்டை போட்டு நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து வாணலியை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து மிளகுத்தூளை அதில் போட்டு, கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை ஆஃப் செய்துவிட்டு வானொலியை இறக்கி விடவும். இப்போ நமக்கு சுவையான, பார்த்தாலே நாக்கில் எச்சி ஊறக்கூடிய நண்டு கிரேவி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here