இந்தியாவில் வேகமாக பரவி வரும் “உருமாறிய கொரோனா” – பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு!!

0

இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரதுறை அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா:

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவ தொடங்கியது உருமாறிய கொரோனா வைரஸ். தற்போது இந்த புது வகை கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்துக்கு சேவையை முடக்கியது. தற்போது மீண்டும் நேற்று இந்தியா மற்றும் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது. நேற்று பிரிட்டனில் இருந்து 246 பயணிகள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு:

தற்போது உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளுக்கு நடத்த பட சோதனையில் இது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த 6ம் தேதி வரை உள்ள நிலவரப்படி நாட்டில் 73 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அதன்படி தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாநிலத்தில் தனி அறையில் வைத்து தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களின் உடற் வெப்பத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here