தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
weather in tn
weather in tn

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிகத்தில் தொடர்ந்து நீடிக்கும் மழை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் எனவும் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்யும் எனவும் மற்ற உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அடுத்து வருகின்ற நான்கு தினங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழையும் மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியில் சுமார் 8 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!!

rain update

ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ம் தேதிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யகூடும். மேலும் இந்த தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அது தவிர சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here