ஆன்லைன் ரம்மியில் சுமார் 8 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!!

0

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 8 லட்சரூபாய் பணத்தை இழந்த கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருப்பூரில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி:

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீதான மோகத்தில் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கடன் வாங்கி விளையாடி தோற்பதால் அதிகபட்ச மனஉளைச்சலுக்கு ஆளாகி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 5ம் தேதி திருப்பூரில் உள்ள கொங்கு மெயின் ரோடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலை வேறு உடல் வேறாக கிடந்த அந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கோவையை சேர்ந்த எல்வின் பிரடெரிக் (வயது 30) என்று தெரிய வந்தது. முன்னதாக இவரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எல்வின் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கோவையிலிருந்து திருப்பூருக்கு நடந்தே வந்து அங்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரிய வந்தது. இளைஞர் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here