தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இந்த நாட்களில் கடைகள் செயல்படாது.., அதிகாரிகள் அறிவிப்பு!!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இந்த நாட்களில் கடைகள் செயல்படாது.., அதிகாரிகள் அறிவிப்பு!!!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இந்த நாட்களில் கடைகள் செயல்படாது.., அதிகாரிகள் அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகள் மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூட தீபாவளி பண்டிகை வர உள்ளதால் மக்களுக்கு முன்கூட்டியே பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நவம்பர் 3 மற்றும் 10 ஆம் தேதி ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நலன் கருதி அந்த நாட்கள் பணி நாளாக அறிவிக்கப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., அதிக வட்டி தரக்கூடிய FD கணக்கு? முழு விவரம் உள்ளே!!!

அதன்படி பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை ஊழியர்கள் விநியோகம் செய்தனர். இந்நிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு நாட்கள் நியாய விலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக தற்போது வரும் 13 திங்கட்கிழமை மற்றும் 25 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here