தீபாவளியை முன்னிட்டு இந்த சேவை கட்டணம் 3 மடங்கு உயர்வு., வெளியான ஷாக்கிங் நியூஸ்., அதிர்ச்சியில் பயணிகள்!!!

0

பொதுவாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவுகள் செய்யப்பட்டு மக்கள் பயணித்து வருகின்றனர். மேலும் இதற்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளையும் தமிழக போக்குவரத்து துறை இயக்கி வருகிறது.
இந்நிலையில் பயண நேரம் மற்றும் கூட்டம் காரணமாக பலர் விமான சேவையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி,,சேலம், மதுரை கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான டிக்கெட்களின் கட்டணம் எப்போதும் விட தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்தின் கட்டணம் இதுவரை ரூ. 2390 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.11,504 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை – தூத்துக்குடிக்கு ரூ. 13287,  சென்னை – திருச்சிக்கு ரூ. 13086, சென்னை – மதுரைக்கு ரூ.13415 ஆகவும் உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here