மனமனக்கும் மண்பானை ‘நெத்திலி மீன் குழம்பு’ ரெசிபி – கிராமத்து ஸ்டைல்!!

0

தீபாவளி பண்டிகை என்றாலே அசைவ உணவு தாங்க. கோழி, ஆடுகளை விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான். அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி மீனில் தான் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. நெத்திலி மீன் பெரிய விலையெல்லாம் இல்லை. இவை சராசரி மீன்களை விட விலையும் கம்மி தான். இப்படிபட்ட மீனை குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு செஞ்சு கொடுங்க. இனி மீன்களை உணவில் சேருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை மெயிண்டைன் பண்ணுங்க.

மருத்துவ பயன்கள்:

  • நெத்தில மீனில் புரத சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • உடல் எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
  • வாரத்திற்கு ஒருமுறை நெத்திலி மீனைச் சாப்பிட்டால் கண்பிரச்சனையை தீர்க்கலாம்.
  • நெத்தில் மீனில் உள்ள வைட்டமின் டி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நெத்தில் மீனை குழந்தைகளுக்கு கொடுத்தால் ஆஸ்துமா பாதிப்பில் இருந்து பாதுகாக்காலம்.

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் – 1/2 கிலோ

சிறிய வெங்காயம் – 4

தக்காளி – 3

மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – 1 சிறிய துண்டு

பூண்டு – 10 பல்

தேங்காய் பால் – அரை டம்ளர்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1 சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சோம்பு – 1 டீஸ்பூன்

புளி – 1 கப்

செய்முறை

நாம் முதலில் மீனை கசடு போக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கப் அளவு புளியை கரைத்து வைத்துக்கொண்டு பின்பு இஞ்சியை விழுதாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்வோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு ஒரு மண் சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சோம்பு போட்டு பொறிய விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதங்கிய பிறகு மஞ்சள், மிளகாய் பொடி, தனியா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

அதற்கு பின் தேவையான அளவு உப்பு, நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு. அதற்கு பின்னர் மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து 1 கொதிப்பு வந்த உடன் இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இப்ப சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here