இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் விகிதம் அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது சரிந்து வருகிறது. ஆனால், இன்று புதியதாக இந்தியாவில் பாதிப்பு விகிதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனாவுக்கு இதுவரை லட்ச பேர் பலியாகினர். உயிரிழந்தோர் விகிதம் 1.27 ஆக உயர்ந்தது. தற்போது அதே சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை மலைபோல் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corono
corono

தற்போதைய 8 மணியளவில் முடிந்த 24 மணிநேரத்திற்கான எடுக்கப்பட்ட நிலவரப்படி புதியதாக 44,281 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 512 பேர் உயிரிழந்துள்ளனர. நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,36,011 ஆகவும், மொத்த இறப்பு 1,27,571 ஆகவும் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

சரிவு

இந்தியாவில் 4,94,657 பேருக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டாலும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

corono treatment
corono treatment

இன்று எடுக்கப்பட்ட நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.83% ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 96,410 பேர் குணமடைந்துள்ளனர். ஆகையால் குணமடைந்தோர் விகிதம் 92.69% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 1.48 % ஆகவும் குறைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here