NED vs SA 2023: தென்னாப்பிரிக்கா போராட்டம் வீண்…, 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அபார வெற்றி!

0
NED vs SA 2023: தென்னாப்பிரிக்கா போராட்டம் வீண்..., 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அபார வெற்றி!
NED vs SA 2023: தென்னாப்பிரிக்கா போராட்டம் வீண்..., 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அபார வெற்றி!

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 10 அணிகளுக்கு இடையே கடந்த 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 43 ஓவரில் 245 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் 78 ரன்கள் விளாசினார்.

Enewz Tamil WhatsApp Channel 

தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி என்கிடி, மார்கோ ஜான்சன், ரபாடா ஆகியோர் 2 விக்கெட்களை சாய்த்தனர். இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக விளையாடிய குயின்டன் டி காக் 20 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அதன்பிறகு ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி அசத்தினர். இவர்களை தொடந்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறியதால் தென்னாப்பிரிக்கா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை புள்ளிப் பட்டியல் வெளியீடு…, அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here