உலக கோப்பை புள்ளிப் பட்டியல் வெளியீடு…, அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பை புள்ளிப் பட்டியல் வெளியீடு..., அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!
உலக கோப்பை புள்ளிப் பட்டியல் வெளியீடு..., அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், தற்போது வரை அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில், புள்ளிப் பட்டியல் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிப்பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, 3 போட்டிகளையும் வென்றுள்ள இந்தியா (+1.821) மற்றும் நியூசிலாந்து (+1.604) அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தைத் தக்க வைத்துள்ளன. 2 போட்டிகளை வென்ற தென் ஆப்பிரிக்கா (+1.385) மற்றும் பாகிஸ்தான் (-0.137) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 3 மற்றும் 4 வது இடத்தில் உள்ளன. இவர்களை தொடர்ந்து, ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் 5 முதல் 9 வது வரையிலான இடத்தை பிடித்துள்ளனர். இதுவரை ஒரு போட்டியையும் வெல்லாத இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here