‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ நேதாஜியின் 125வது பிறந்தநாள் இன்று!!

0
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70

சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு நெருப்பு பொறியாக இருந்து சுதந்திர நெருப்பை பற்ற வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுபாஷ் சந்திரபோஸ்:

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த சுபாஷ் சந்திரபோஸ் பப்டிமிஸ்ட் பள்ளி, கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். படிப்பில் சிறந்த மாணவராக விளங்கியதோடு மாணவர்களுக்கான படைப்பயிற்சியில் பங்குகொண்டு படைப்பயிற்சியும் பெற்றார்.

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை – வெளியான தகவலால் பரபரப்பு!!

அதன்பிறகு ஐசிஎஸ் படிப்பில் தேறிய சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயர்க்கு அடிபணிந்து வேலை செய்யமுடியாது என தனது வேலையை உதறினார். நேதாஜியின் சுதந்திர தாகத்தை பற்றி அறிந்த சி.ஆர். தாஸ் தனது தேசிய கல்லூரியின் தலைவர் பொறுப்பை அவருக்கு வழங்கினார். அக்கல்லூரியின் தலைவராகும்போது அவருக்கு வயது 25. போஸ் மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக திகழ்ந்ததோடு நல்ல தலைவராகவும் இருந்தார். மாணவர்களிடையே தனது பேச்சின் மூலம் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் பரப்பினார். நேதாஜியின் புகழ் நாடெங்கும் பரவத்துவங்கியது.

ரயில்களில் மீண்டும் உணவு விற்பனை – IRCTC முடிவு!!

மஹாத்மா காந்தியின் அகிம்சை வழிகளில் நம்பிக்கை இல்லாத நேதாஜி தனக்கென ஒரு தனி பாதையை வகுத்தார். கொல்கத்தாவில் பல்வேறு சீர்திருத்தப்பணிகளை ஆற்றிய போஸ் சுதந்திர உணர்வை மக்களிடையே தொடர்ந்து ஊட்டிவந்தார். தமக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜியை அடக்க எண்ணிய ஆங்கிலேயர் அவர்மீது பொய் குற்றசாட்டுகளை கூறி கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அவரது புகழும் நற்பெயரும் நற்பெயரும் அவர் சிறையில் இருந்தபடியே சட்டமன்ற தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து நேதாஜி செய்துவந்த ஒவ்வொரு செயலும் ஆங்கிலேயருக்கு பெரும் அடியாக விழுந்து கொண்டே இருந்தது. இந்தியாவுக்கென தனிக்கொடியினை அறிவித்தார். ஜனகன மன பாடலை தேசியகீதமாக்கினார்.இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் ராணுவம் ஒன்றை ஆங்கிலேயருக்கு எதிராக உருவாக்கினார். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் பெண்களுக்கான தனிப்படை ஒன்றினை ஜான்சி ராணிப்படை என்ற பெயரில் உருவாக்கினார். தவிர முதன்முதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியதும் இவரே.

ஆந்திராவில் மீண்டும் மர்மநோய் தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு!!

இவ்வளவு பெருமைகளை உடைய நேதாஜி 1954ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி விமானத்தில் மலேசியாவுக்கு தப்பிச்செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டதாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால் அவர் இறக்கவில்லை, வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்தார் எனவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. அவர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த போதே தப்பித்து ஜெர்மனி சென்றவர் விமான விபத்தில் இறந்திருக்க வைய்ப்பில்லை என அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். உண்மை எதுவாயினும் அவரது புகழ் என்றும் அழியாது என்பதே நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here