ஆந்திராவில் மீண்டும் மர்மநோய் தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு!!

0

ஆந்திராவில் மீண்டுமாக மர்மநோய் தாக்குதலால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்படிப்பட்ட மர்மநோய் தாக்குதலுக்கு ஆளான அதே பகுதியில் மீண்டும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மர்மநோய்

கடந்த டிசம்பர் மாதம் ஆந்திரா மாநிலம் ஏலூரு அருகே கிராம மக்கள் பெயர் தெரியாத மர்மநோயால் தாக்கப்பட்டிருந்தனர். சிறியவர்கள் துவக்கி பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நோயால் இன்னல்களுக்கு உள்ளானார்கள். வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஆகியவை இந்த நோயின் அறிகுறியாக கருதப்பட்டது. இந்த நோயினால் 300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். முதல் சிகிச்சையிலேயே 140 பேர் குணமடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீண்டும் தற்போது ஒரு புதியவகை நோயினால் ஆந்திர மாநிலத்தை கோதாவரி மாவட்டம் கோமரப்பள்ளி என்ற கிராமத்தில் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை 22 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரது உடல் நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சையது முஷ்டாக் அலி காலிறுதி போட்டி – தமிழ்நாடு VS ஹிமாச்சல் அணிகள் பலப்பரீட்சை!!

Mystery Disease in Andhra Pradesh Eluru: 'Mystery Illness' takes over Andhra Pradesh's Eluru: What we know so far

இந்த நோய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தெண்டலூரு எம்எல்ஏ, மேற்கு கோதாவரி ஆட்சியாளர் ரெவு முத்தியலா ராஜு உள்ளிட்டோர் அந்த கிராமத்துக்கு சென்று மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here