ரயில்களில் மீண்டும் உணவு விற்பனை – IRCTC முடிவு!!

0

கொரோனா பரவலினால் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் மீண்டும் உணவு விற்பனை தொடங்கப்படபோவதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

மீண்டும் உணவு விற்பனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சாலைவழி போக்குவரத்து மீண்டுமாக தொடங்கப்பட்டதை அடுத்து ரயில் சேவையும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் செயல்படும் அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படுகின்றன.

ஆந்திராவில் மீண்டும் மர்மநோய் தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு!!

ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ரயில்களில் உணவு சப்ளை செய்யப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து முக்கிய நகரங்களில் மீண்டுமாக ரயில்களில் உணவு விற்பனையை தொடங்க இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது. தொடக்கமாக கவுரா, மால்டா, பகல்பூர் ஆகிய இடங்களில் உணவு விற்பனை தொடங்கிவிட்டது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் உணவு விற்பனை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மார்ச் மாதத்துக்குள் ரயில் சேவை வழக்கம் போல தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here