சசிகலாவிற்கு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை – கொரோனா தொற்று எதிரொலி!!

0

சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு கொரோனா:

பெங்களூரு சிறையில் சசிகலா உட்பட 3 பேர் சொத்து குவிப்பு வழக்கின் அடைப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது தண்டனை காலம் முடிவு பெற இருந்த நிலையில் அவர் தனது வழக்கறிஞர் மூலமாக அபராத தொகையினை கட்டினார். இவர் கடந்த சில நாட்களாக சர்க்கரை, தைரொய்ட் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தார்.

ஆந்திராவில் மீண்டும் மர்மநோய் தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு!!

Expelled AIADMK leader V.K. Sasikala tests positive for Covid-19

இந்நிலையில் இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான காலமும் நெருங்கியது. அதே போல் இவருக்கு சில காலங்களாக நுரையிரல் பாதிப்பினால் அவதிப்பட்டும் வந்தார். இப்படியான சூழலில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இப்படியான நிலையில் இவர் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பு காரணமாக இவர் தற்போது விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனையின் ரமேஷ் கிருஷ்ணன் கூறுகையில், “வழக்கமாக கொரோனா நோயாளிகளுக்கு 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், சசிகலாவிற்கு கடும் நிமோனியா இருப்பதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here