தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை – வெளியான தகவலால் பரபரப்பு!!

0

தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் தாக்கியதில் கடலில் விழுந்து இறந்துள்ளனர். அவர்கள் உடலின் பிரேதபரிசோதனை இன்று இலங்கையில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பிரேதபரிசோதனை

ஜனவரி 18 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்த நான்கு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையை சேர்ந்த ரோந்து கப்பல் மோதியதால் அவர்கள் நான்கு பேரும் கடலில் விழுந்துள்ளார். கடலில் விழுந்தவர்கள் இறந்த சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

ரயில்களில் மீண்டும் உணவு விற்பனை – IRCTC முடிவு!!

இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். மேலும் இறந்தவர்களின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தனர். இறந்தவர்களின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என இலங்கை மீன்வதுறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

தற்போது இறந்தவர்களின் உடல்களுக்கு இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேதபரிசோதனை நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் குறித்து இந்தியா தரப்பில் இன்னும் எந்த வித தகவலும் உறுதிசெய்யப்படவில்லை எனவும் இந்திய கடற்படைக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here