ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

0

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.120 குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை உருவாகியுள்ளது.

ஆபரண தங்கம்:

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது திருமண மூகூர்த்தங்கள் துவங்கி விட்டதால் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நகை கடைகளில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவது கடைக்காரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ நேதாஜியின் 125வது பிறந்தநாள் இன்று!!

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.120 குறைந்த ஆபரணத்தங்கம் ரூ.37,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,660 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.71,400 க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.40 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here