ஓசூர் கொள்ளை சம்பவத்தில் காவல் துறையின் செயல்பாடு ஒரு மைல்கல் – முதல்வர் பாராட்டு!!

0

ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்சிலிருந்து நடந்த கொள்ளை சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்ததோடு கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கத்தையும் மீட்ட காவல் துறைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொள்ளை சம்பவம்:

ஓசூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனமான முத்தூட்டிலிருந்து சுமார் 25 கிலோ மதிப்புள்ள தங்கநகைகள் நேற்று மதியம் கொள்ளையடிக்கப்பட்டன. உடனடியாக விசாரணையை துவங்கிய போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்மூலமாக கொள்ளை சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்கள் நகைகளை எடுத்துச்சென்ற பைகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து போலீசார் ஜிபிஎஸ் சிக்னலை தொடர்ந்து சென்று குற்றவாளிகளை தேடினர்.

சசிகலாவிற்கு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை – கொரோனா தொற்று எதிரொலி!!

இந்நிலையில் ஜிபிஎஸ் கருவியின் சிக்கனல்கள் கர்நாடக மாநிலம் ஆனைக்கால் என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து குற்றவாளிகளின் செல்போன் சிக்னல்கள்களின் அடிப்படையில் நடத்தவிசாரணையில் கர்நாடகாவிலிருந்து சில மர்ம நபர்கள் சந்தேகப்படும் வகையில் பைகளை எடுத்துக்கொண்டு ஹைதராபாத் சென்றது கண்டறியப்பட்டது. அவர்களை பின்தொடர்ந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி.சக்திவேல் தலைமையிலான குழு ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Robbery in Muthoot finance Hosur: Armed gang robs gold, cash from Muthoot Finance branch in Tamil Nadu's Hosur | Chennai News - Times of India

இந்நிலையில் கொள்ளை நடைபெற்று 18 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் பழனிசாமியும் தனது பாராட்டுகளை காவல் துறைக்கு தெரிவித்துளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழக காவல்துறையின் மணிமகுடத்தில் இந்த நிகழ்வு ஒரு வைரக்கல். துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்ததோடு 25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும் பத்திரமாக மீட்ட காவல் துறைக்கு எனது பாராட்டுகள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு எனது மனமார்ந்த பாராட்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here