எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ – செல்வராகவனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

0

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் தடைக்கு பிறகு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. த்ரில்லர் வகையில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிகை நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக எழுந்த வழக்கில், இப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழங்கின் மறு தீர்ப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து இப்படம் இன்று திரையிடப்பட்டது.

பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

இன்று காலை முதலே இப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. படத்தை பார்த்துள்ள ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். அதில், இப்படம் எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு, செல்வராகவன் செல்வராகவன் தான்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் அக்மார்க் திரைப்படம், இது செல்வராகவனின் பிறந்தநாளுக்கான சிறந்த பரிசு என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்வீட் மூலம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரெஜினா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here