ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!!

0

சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதா நினைவிடம்:

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. மேலும் இந்த நினைவிடம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. தற்போது இது கடலோர விதிமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து கூறிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த கட்டுமானங்களும் இருக்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. எனவே இந்த நினைவிடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். மேலும் மத்திய மாசு கட்டுப்படு வாரியம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

திருச்சியில் மார்ச்7இல் திமுக பொதுக்கூட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு!!

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பையா, சத்திக்குமார் சுகுமாரா குரூப் அடங்கிய அமர்வுக்கு ஜெயலலிதா நினைவிடத்தை கட்டுவதற்கு தடை செய்ய கூறிய மனுவை இரு நீதிபதிகள் ஏற்கனவே தள்ளுபடி செய்தனர். தற்போது மீண்டும் தடை கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here