இனி நர்சிங், சித்தாவிற்கும் நீட் கட்டாயம் – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

0

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வு இனி நர்சிங் மற்றும் சித்தாவிற்கும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நீட்:

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு தான் நீட் நுழைவு தேர்வு. இந்த தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வு கடந்த கொரோனா காலத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நீட் தேர்வு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு இனி சித்தா, யுவானி, ஹோமியோபதி போன்ற இயற்கை மருத்தவ படிப்புகளுக்கும் மற்றும் பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியல், நுண்ணறிவியல் போன்ற அறிவியல் படிப்புகளுக்கும் கட்டாயமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு அடுத்த மாதத்தில் தொடக்கம் – தேர்வுத்துறை அறிவிப்பு!!

இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தங்களது மருத்துவ கனவை நினைவாக்க நர்சிங் போன்ற படிப்புகளை படித்து தேர்ச்சி பெற்று வந்தனர். தற்போது இந்த அறிக்கை அனைவரின் கனவையும் கலைப்பது போல் உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here