கையில் குழந்தை உடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள குழந்தையா??

0

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது காதலனுடனும் கையில் ஒரு குழந்தையுடனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நயன்தாரா பல தடங்கல்களை தாண்டி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பித்த நாளில் இருந்தே பல பிரச்சனைகளை கடந்து வருகிறார் நம்ம நயன்தாரா. ஆனாலும் எதர்க்கும் அசையாமல் தனது கேரியரில் கவனம் செலுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து வரும் வரை முன்னேறியுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்திலேயே அதிகம் நடித்து வரும் நயன்தாரா அதில் வெற்றியையும் பார்த்து விடுகிறார். அந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் அவரை இந்த அளவிற்கு ஜொலிக்க வைத்துள்ளது. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே மாஸ் ஹிட்.

அதுவும் நெற்றிக்கண் படத்தில் தனது நடிப்பை வேற லெவெலில் வெளிப்படுத்தி இருப்பார். இந்த ஒரு படமே அவரை மார்க்கெட்டில் தூக்கி விட்டுள்ளது. விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஆனாலும் முக்கிய இலக்கை அடைந்த உடன் தான் திருமணம் என்பதில் குறியாக உள்ளாராம் நயன்தாரா. இவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டாகும். அதே போல தற்போது ஒரு குழந்தையுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here