பீஸ்ட் படத்தில் விஜய் உடன் இரண்டாவது முறையாக இணையும் முக்கிய பிரபலம் – சந்தோஷத்தில் துள்ளிகுதித்த நடிகை!!

0

தமிழ் திரையுலகின் தளபதியான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அதில் இணைய இருக்கும் முக்கிய பிரபலத்தை பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

தளபதியின் பீஸ்ட்

உச்சகட்ட நடிகராக திகழும் விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதுவும் 2020 இல் இருந்தே அவரது அனைத்து படங்களுமே கல்லா கட்டி விடுகிறது. அதுவும் மாஸ்டர் படத்திற்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த வருட பொங்கலில் தான் படத்தை ரிலீஸ் செய்தனர்.

அதன் பிறகு விஜய் நெல்சனுடன் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்த நிலையில் படத்தின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிட்டிருந்தனர். மேலும் அதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவலும் வெளியானது.

முதன்முறையாக செல்வராகவன் விஜய் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அதன் பின் தற்போது 4வது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து கொண்டுள்ளது. அப்பொழுது கூட தல தோனி சந்திப்பு நடைபெற்றது. அந்த புகைப்படம் இணையம் முழுக்க ட்ரெண்டிங்கானது. இந்நிலையில் தற்போது இந்த பீஸ்ட் படத்தில் இணையும் முக்கிய பிரபலத்தின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த ஜனனி துர்கா இந்த படத்திலும் நடிக்க இருக்கிறாராம். அவர் அளித்த பெட்டியில் விஜய் உடன் இரண்டாவது முறை இணைந்திருப்பது சந்தோசத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here