நடிகை நயன்தாராவின் தங்கையா இது?? ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டாங்க!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மற்றும் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர்.

விஜய் பட நடிகர்

தமிழ் திரையுலகில் விஜய் படம் என்றாலே அது பக்கா மாஸ் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இத்தனை வருடங்களாக மக்கள் மனதில் அந்த அளவிற்கு இடம் பிடித்துள்ளார். தன்னை கேவலமாக பேசியவர்களையே வாயடைத்து போகும் அளவிற்கு செய்தார்.

மாண்புமிகு மாணவன் படத்தில் ஆரம்பித்து தற்போது மாஸ்டர் வரை பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். பல ஆக்சன் படங்களில் நடித்து மக்களின் நாயகனாக வலம் வருகிறார்.

மேலும் இவர் பல அண்ணன் சென்டிமெண்ட் நிறைந்த படங்களிலும் நடித்துள்ளார். திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற பாசமிகு படங்களும் சூப்பர் ஹிட். இந்நிலையில் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் சரண்யா மோகன்.

அந்த படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்ட அவர் திரைத்துறை பக்கம் தலையை கூட காட்டவில்லை. இப்படி இருக்க தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சரண்யா மோகனா இது?? என பலரும் வியந்து வருகின்றனர். ஏனெனில் இவர் பல படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். யாரடி நீ மோகினி படத்தில் கூட நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here