பிக் பாஸ் முகின் ராவ் க்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – எங்கயோ போய்ட்டிங்க போங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான முகின் ராவ் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மேலும் ஓர் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

முகின் ராவ்:

மலேசிய நாட்டில் பிரபலமாக இருந்து தமிழக மக்களை கவர நினைத்தார் முகின் ராவ். இதன் காரணமாக இவர் தமிழில் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் முகின், சாண்டி, கவின், தர்சன் மற்றும் லாஸ்லியா ஆகிய ஐந்து பெரும் செய்த லூட்டி அனைவராலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர்கள் பாடிய வீ ஆர் த பாய்ஸ் என்னும் பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம் போட்டு வந்தனர். மேலும் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னராகவும் முகின் ராவ் தேர்வுசெய்யப்பட்டார். அதற்கு பின்பு இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘வி மிஸ் யூ பாப்பா’ – உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் பட நாயகி!!

இந்நிலையில் தற்போது முகின் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி இவர் தற்போது z city பிரதிநிதியாக அவதரித்துள்ளார். தற்போது அதற்கான பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முகின். இதனை முன்னிட்டு இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here