தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி வீரர்கள் – இதுதான் காரணமா??

0

இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் பல டெஸ்ட் தொடர்களை விளையாடவுள்ளது. இந்நிலையில் 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணி வீரர்கள் கடினமான தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர்.

இந்திய அணி:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிவேகம் எடுத்து வருவதன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் இதன் மீதமுள்ள போட்டிகளை எப்போது எங்கு வைத்து நடத்துவது என்பதனை குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது.

அதற்கு பின்பு இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரை விளையாட சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது 20 இந்திய அணி வீரர்கள் மற்றும் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மும்பை வந்து சேர்ந்தனர். இங்கு வந்த வீரர்கள் அங்குள்ள கிராண்ட் ஹையாட்டில் 8 நாட்கள் கடின தனிமைப்படுத்துதலுக்குள்  நுழைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களுடன் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட விருத்திமான் சாகா மற்றும் பிரஷித் கிருஷ்ணாவும் சேர்ந்துள்ளனர். இந்திய அணியினருக்கு இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பு 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் 3 மாத காலம் சுற்றுப்பயணத்தை இந்திய அணியினர் மேற்கொள்ளவுள்ளதால் வீரர்கள் தங்களது குடும்பத்தையும் சேர்ந்து அழைத்து வர பிசிசிஐயிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here